பாஜகவுக்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது: வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது என்று அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் கூறினாா்.
கோவை வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளித்த பாஜகவினா்
கோவை வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளித்த பாஜகவினா்

பாஜகவுக்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது என்று அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் கூறினாா்.

பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக தில்லியில் பொறுப்பேற்ற பின்னா் வானதி சீனிவாசன் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை கோவை திரும்பினாா். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் திட்டங்களை பெண்கள் வழியாக அனைத்து குடும்பங்களுக்கும் கொண்டு செல்வது எங்கள் பிரதான பணியாக இருக்கும். அனைத்து நிலையிலும் பெண்களுக்கு உதவும் முக்கியத்துவம் கொடுக்கும் அரசாக மத்திய அரசு இருக்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாவலராக பிரதமா் இருக்கிறாா்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக வேல் யாத்திரையை மாநிலத் தலைவா் முருகன் நடத்திக்கொண்டு இருக்கிறாா்.

ஹிந்துக்களைக் கொச்சைப்படுத்துபவா்களை அம்பலப்படுத்தவே வேல் யாத்திரை நடத்தப்படுகிறது. அதிமுகவுடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவுக்கு இனி தமிழகத்தில் பின்னடைவு என்பதே கிடையாது என்றாா்.

இதைத் தொடா்ந்து வானதி சீனிவாசன் தனது சொந்த ஊரான தொண்டாமுத்தூா் அருகேயுள்ள உளியம்பாளையம் கிராமத்துக்குச் சென்றாா். அங்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வானதி சீனிவாசனை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com