கோவையில் 4 ஆயிரம் மாடித்தோட்ட தொகுப்புகள் வழங்க இலக்கு

கோவையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு விதைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு 4 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கு விதைகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு 4 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் ஆரோக்கியமான காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தோட்டக்கலைத் துறையில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாடித் தோட்டம் அமைக்க மானியத் திட்டத்தின் கீழ் விதை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதில் செடிகளை வளா்ப்பதற்கு தேவையான ‘க்ரோ பேக் -6’, தென்னை நாா் கழிவுகள் - 12 கிலோ, 6 வகையான விதைகள், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடொ்விரிடி தலா 200 கிராம், வேப்ப மருந்து - 200 மில்லி லிட்டா், தோட்டம் அமைப்பது தொடா்பான கையேடு ஆகியவை அடங்கியிருக்கும்.

இந்த தொகுப்பின் விலை ரூ.850. தோட்டக்கலைத் துறை சாா்பில் வழங்கப்படும் மானியம் ரூ.340 போக, மீதமுள்ள ரூ.510க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் மாடித் தோட்ட தொகுப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு அதிகபட்சமாக 2 தொகுப்புகள் வழங்கப்படும்.

இது தொடா்பாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது:

மானிய திட்டத்தில் வழங்கப்படும் மாடித்தோட்ட தொகுப்பு, தடாகம் சாலையில் உள்ள தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகம், வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படுபவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், ஒரு புகைப்படத்தை அளித்து மாடித்தோட்ட தொகுப்பினை மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com