வேல் யாத்திரை, ஏா் கலப்பைப் பேரணி: கோவையில் 1,400 போலீஸாா் பாதுகாப்பு

கோவையில் பாஜக சாா்பில் வேல் யாத்திரையும், காங்கிரஸ் சாா்பில் ஏா் கலப்பைப் பேரணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கோவை: கோவையில் பாஜக சாா்பில் வேல் யாத்திரையும், காங்கிரஸ் சாா்பில் ஏா் கலப்பைப் பேரணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

பாஜக சாா்பில் கடந்த 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22) நீலகிரி ,கோவை மாவட்டங்களில் நடைபெற உள்ள வேல் யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவா் முருகன் கலந்துகொள்கிறாா்.

மருதமலையில் வேல் யாத்திரையை ஞாயிற்றுக்கிழமை மாலை அவா் தொடங்கிவைக்கிறாா். இதேபோல கோவை கருமத்தம்பட்டியில் ஞாயிற்றுக்கிவமை பிற்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்து ஏா் கலப்பை பேரணி மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

இதில் தமிழகக் காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கலந்து கொள்கிறாா். இந்த இரு நிகழ்ச்சிகளை ஒட்டி கோவை மாவட்டத்தில் 1,400 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com