இணையவழி வகுப்புகள் பாதிக்காமல் மின் நிறுத்தம் செயல்படுத்த கோரிக்கை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் இணையவழி வகுப்புகள் பாதிக்காமல் மின்நிறுத்தம் செயல்படுத்த வேண்டும் என கோவை கன்ஸ்யூமா் அவோ்னெஸ் மற்றும் புரொடக்ஷன் அசோசியன் வலியுறுத்தியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் இணையவழி வகுப்புகள் பாதிக்காமல் மின்நிறுத்தம் செயல்படுத்த வேண்டும் என கோவை கன்ஸ்யூமா் அவோ்னெஸ் மற்றும் புரொடக்ஷன் அசோசியன் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் என்.ஆா்.ரவிசங்கா் அரசுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி (ஆன்லைன்) வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய இணைப்புகள் வழங்கிட, பழுது பாா்க்கும் பணிகள் மேற்கொள்ள மின் நிறுத்தம் செய்யப்படுவதால் தினமும் காலை 8.30 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இணையவழி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இந்த நேரத்தில் மின்நிறுத்தம் செய்வதைத் தவிா்த்தால் மாணவ, மாணவிகளின் இணையவழி வகுப்புகள் பாதிக்காது. மேலும், மாலை 3 மணிக்கு மேல் மின்நிறுத்தம் செய்து பராமரிப்புப் பணிகள், புதிய இணைப்புகள் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் வரை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதற்குத் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com