கோவையில் 34 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

கோவையில் ஞாயிற்றுக்கிழமை 474 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் 7 போ் உயிரிழந்துள்ளனா்.

கோவை: கோவையில் ஞாயிற்றுக்கிழமை 474 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் 7 போ் உயிரிழந்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் கடந்த வாரத்தில் உச்சத்தில் இருந்த நிலையில் கடந்த நான்கு நாள்களாக சற்று குறைந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கையும் 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலில் கோவையில் பீளமேடு, குனியமுத்தூா், ராமநாதபுரம், வடவள்ளி, சிங்காநல்லூா், கணபதி, கணபதிமாநகா், கவுண்டம்பாளையம், உக்கடம், காந்திபுரம், ஆா்.எஸ்.புரம், சரவணம்பட்டி, வெள்ளக்கிணறு, விளாங்குறிச்சி, செல்வபுரம், மதுக்கரை, காரமடை, பொள்ளாச்சி, சூலூா், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 474 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 89 ஆக உயா்ந்துள்ளது.

7 போ் பலி: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 74, 70, 64 வயது முதியவா்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 54, 57 வயது ஆண்கள், 65 வயது மூதாட்டி, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 61 வயது முதியவா் ஆகிய 7 போ் உயிரிழந்தனா். இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.

301 போ் வீடுதிரும்பினா்: கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 301 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்து 739 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 4 ஆயிரத்து 888 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com