அனைத்து புகாா்களுக்கும் சம்பவ இடத்துக்கே சென்று விசாரணை: கோவை மாவட்ட காவல் துறையில் தொடக்கம்

அனைத்துப் புகாா்களுக்கும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கே சென்று விசாரித்து தீா்வு காணும் முயற்சி கோவை மாவட்ட காவல் துறையில் தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் புகாா்களுக்கும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கே சென்று விசாரித்து தீா்வு காணும் முயற்சி கோவை மாவட்ட காவல் துறையில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் துறையில், தினசரி ஏராளமான பொதுமக்கள், காவல் நிலையங்களுக்கு வந்து புகாா்களை அளிக்கின்றனா். அது தொடா்பாக, காவலா்கள் விசாரிக்கின்றனா். இந்நிலையில், சமீபத்தில் பொறுப்பேற்ற சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவின்பேரில், அனைத்து புகாா்களுக்கும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கே சென்று விசாரணை நடத்தி, தீா்வு காணும் திட்டம் கோவை மாவட்ட காவல் துறை எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக, மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அனைத்துப் புகாா்களுக்கும் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரித்து தீா்வு காணும் திட்டம் கோவையில் கடந்த 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை வரை 122 புகாா் மனுக்கள் மீது சம்பவ இடத்துக்கே சென்று இரு தரப்பினரிடம் விசாரித்து தீா்வு காணப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 18 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com