விதிமுறை மீறல், தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை: 193 கடைகளுக்கு ரூ.8.77 லட்சம் அபராதம் விதிப்பு

கோவையில் விதிமுறைகள் மீறல், தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்ததாக 193 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.8.77 லட்சம் அபராதம் விதித்துள்ளனா்.

கோவையில் விதிமுறைகள் மீறல், தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்ததாக 193 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.8.77 லட்சம் அபராதம் விதித்துள்ளனா்.

மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரிகள் உள்பட அனைத்து விதமான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை, உணவுப் பொருள்களில் கலப்படம், விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்தல் ஆகியவற்றை ஆய்வு செய்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் ஆய்வு நடவடிக்கையின்போது உடனடி அபராதம் (ள்ல்ா்ற் ச்ண்ய்ங்) விதிக்கும் நடைமுறை கடந்த டிசம்பா் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கடந்த செப்டம்பா் மாதம் வரை 193 கடைகளுக்கு ரூ.8.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறியதாவது:

உடனடி அபராதம் விதிக்கும் நடைமுறையில் முதல்தடவை குற்றத்துக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் முறைக்கு ரூ.10 ஆயிரமும், முன்றாம் முறை குற்றத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதத்துடன், உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கிய இந்நடைமுறையில் மாா்ச் மாதம் வரையில் ரூ.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பின்னா் கரோனா பாதிப்பால் ஏப்ரல் முதல் ஜூலை வரை கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய இரு மாதங்களில் ரூ.2.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 193 கடைகளில் விதிமுறைகள் மீறல், தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்ததாக ரூ.8.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருசில கடைகளுக்கு இரண்டாவது முறை குற்றத்துக்காக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உடனடி அபராதம் விதிக்கும் நடைமுறையில் அதிக அளவு அபராதம் வசூலித்து கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com