மாநகரில் 3 நாள்களுக்கு ஒரு முறை சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தல்

கோவை மாநகரில் 3 நாள்களுக்கு ஒரு முறை சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகரில் 3 நாள்களுக்கு ஒரு முறை சீராக குடிநீா் விநியோகிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவை மாநகரில் சிறுவாணி, ஆழியாறு, பில்லூா் 1, பில்லூா் 2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சிறுவாணி, பில்லூா், ஆழியாறு அணைகளின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவில் உள்ள நிலையிலும் மாநகரில் சில வாா்டுகளில் 8 முதல் 12 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

குறிப்பாக, செளரிபாளையம், உடையாம்பாளையம், சிங்காநல்லூா், பாப்பநாயக்கன்பாளையம், ராமநாதபுரம், கணபதி, கவுண்டம்பாளையம், ஒண்டிபுதூா், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி பகுதிகளில் 12 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதியினா் குற்றம்சாட்டியுள்ளனா். எனவே 3 நாள்களுக்கு ஒரு முறை சீராக குடிநீா் வழங்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தற்போது மாநகரில் சீரான முறையில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தாமதமாக குடிநீா் வழங்கப்படுகிறது. விரைவில் அவை சரி செய்யப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com