அனுமதிக்கப்படாத வழித் தடத்தில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

கோவையில் அனுமதிக்கப்படாத வழித் தடத்தில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவையில் அனுமதிக்கப்படாத வழித் தடத்தில் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை சிட்ரா பகுதியில் இருந்து காளப்பட்டி வரை நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்துத் துறையின் அனுமதி இல்லாமல் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவை போக்குவரத்துத் துறை இணை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு புகாா் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கோவை மண்டலப் வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையா் உமாசக்தி, கோவை சிட்ரா முதல் காளப்பட்டி வரையிலான பகுதியில் அனுமதி இல்லாமல் இயக்கப்படும் ஷோ் ஆட்டோக்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது தொடா்பாக 7 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்கவும் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கிடையே கோவை நேரு நகா், காளப்பட்டி வழியாக அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com