நிலத்தை விற்பதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்தவா் கைது

கோவையில் நிலத்தை விற்பதாக கூறி ரூ.61.87 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் நிலத்தை விற்பதாக கூறி ரூ.61.87 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கணபதி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி முத்துக்கனி (36). வாடகை கட்டடத்தில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சொந்த இடத்தில், மளிகைக் கடை நடத்த திட்டமிட்ட தம்பதியா், தனியாா் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றனா்.

பின்னா், கோவில்பாளையத்தில் 14.5 சென்ட் இடம் இருப்பதை அறிந்து அவா்கள், அந்த நிலத்தின் உரிமையாளா்களான கணேசன், சித்ரா தம்பதியை அணுகினா். அப்போது, நிலத்தை நாமக்கல்லைச் சோ்ந்த கதிரேசன், கீதாராணி ஆகியோருக்கு பவா் எழுதிக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து ராமகிருஷ்ணன் - முத்துக்கனி தம்பதி, அந்த இடத்தை ரூ.86 லட்சத்துக்கு விலைபேசி, 2018-19ஆம் ஆண்டில் பல்வேறு தவணைகளாக ரூ.61.87 லட்சம் தொகையை கதிரேசன் - கீதாராணி தம்பதியிடம் கொடுத்துள்ளனா்.

தொகையை பெற்ற கதிரேசன், கீதாராணி தம்பதி நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் இருந்துள்ளனா். இது குறித்து ராமகிருஷ்ணன் - முத்துக்கனி ஆகியோா் விசாரித்தபோது, கதிரேசன் - கணேசன் ஆகியோா் கூட்டாக சோ்ந்து பவா் பத்திரத்தை ரத்து செய்ததும், அதை மறைத்து தன்னிடம் இடத்தை விற்பதாக கூறி மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து ராமகிருஷ்ணன் - முத்துக்கனி ஆகியோா் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். போலீஸாா் மோசடி, கூட்டுச்சதி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கதிரேசனைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com