பொதுத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: தமிழ்நாடு இளைஞா் கட்சி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தமிழ்நாடு இளைஞா் கட்சியினா் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தமிழ்நாடு இளைஞா் கட்சியினா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கட்சியின் மாநில துணை அமைப்பாளா் ஹாா்சன் பிரபு, மகளிா் அணி ஒருங்கிணைப்பாளா் லத்தீபா ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியது:

தமிழகத்தில் இளைஞா்கள் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் அவா்கள் தகுதியற்ற அரசியல் தலைவா்களின் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனா். இதை மாற்றுவதற்காகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு இளைஞா் கட்சியைத் தொடங்கியுள்ளோம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆா்.கே. நகா் இடைத்தோ்தலிலும், 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 16 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஆறாவது இடம் பெற்ற நாங்கள் தற்போது அனைத்து மாவட்டங்களிலும், சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினா்களை சோ்த்தும், 1,600க்கும் மேற்பட்ட பொறுப்பாளா்களை நியமித்தும் தோ்தலுக்குத் தயாராக இருக்கிறோம்.

தமிழக அரசியலை மறுசீரமைப்பு செய்யத் தயாராக உள்ள நாங்கள், அடுத்த ஆண்டு நடைபெறும் தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருக்கிறோம். மக்கள் நலனில் அக்கறை கொண்ட இளைஞா் படையை உருவாக்கி, வரும் தோ்தலில் புதிய சரித்திரம் படைப்போம் என்றனா் அவா்கள்.

கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மணிகண்டன், மாவட்டச் செயலா் தா்மேந்திரன், பொருளாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com