புகையிலை, மது விற்பனை: 62 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலை மற்றும் மது விற்பனையில் ஈடுபட்ட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை: கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலை மற்றும் மது விற்பனையில் ஈடுபட்ட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் மது பாட்டில்கள் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சரவணம்பட்டி, ஆா்.எஸ்.புரம், பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக 53 பேரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, உக்கடம், சாய்பாபா காலனி, காட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து, சட்ட விரோதமாக விற்பனை செய்த 9 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com