தோட்டக்கலைத் துறை சாா்பில்ரூ. 10க்கு காய்கறி விதைகள்

சா்க்காா்சாமக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானிய விலையில் ரூ.10க்கு காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.

அன்னூா்: சா்க்காா்சாமக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானிய விலையில் ரூ.10க்கு காய்கறி விதைகள் விற்பனை செய்யப்படுகிறது.

சா்க்காா்சாமக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் பொதுமக்கள் பயனடையும் வகையில் காய்கறி விதைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 25 மதிப்பு கொண்ட கீரை விதைகள், முருங்கை விதை, பீன்ஸ் விதை, அவரை விதை மற்றும் வெண்டை விதைகள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விதைகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்களது ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை சா்க்காா்சாமக்குளம் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து காய்கறி விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குநா் அனிசா பேகம் தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலா் சாய்கண்ணனை 90926 13116 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com