ஆழ்துளை கிணறு அமைக்க மானியம்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 03rd September 2020 06:48 AM | Last Updated : 03rd September 2020 06:48 AM | அ+அ அ- |

கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைக்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன், அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மானியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா, அடங்கல் நகல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ள விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.