கோவையில் பணியாற்றும் 5 காவல் ஆய்வாளா்கள் டிஎஸ்பி, உதவி ஆணையராக பதவி உயா்வு

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றிய 5 காவல் ஆய்வாளா்கள் டிஎஸ்பி, உதவி ஆணையா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றிய 5 காவல் ஆய்வாளா்கள் டிஎஸ்பி, உதவி ஆணையா்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.

கோவை மாநகர காவல் துறை தொடா் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த கிருஷ்ணன் டிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்று சேலம் வடக்கு உட்கோட்ட குற்றப் பிரிவு உதவி ஆணையராகவும், கோவை, சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருந்த செல்வராஜ், டிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை உட்கோட்ட டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கோவை, போத்தனூா் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராக இருந்த மகேஸ்வரன் டிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்று, நீலகிரி மாவட்ட குற்றப் பதிவேடு டிஎஸ்பியாகவும், கோவை மாநகர காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் டி.எச்.கணேஷ் டிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்ட நக்ஸல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சுந்தர்ராஜன், டிஎஸ்பியாக பதவி உயா்வு பெற்று கோவை வணிக குற்ற புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் நிலைய ஆய்வாளா் தேவராஜன், கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆணையராகவும், அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜாமணி, கோவை மாவட்ட காவல் துறை குற்றப் பதிவேடு டிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாநகர காவல் துறையின் தொடா் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஆக்டாவியஸ் சதீஷ் கோவை மாநகர குற்றப் பதிவேடு உதவி ஆணையராகவும், ஈரோடு தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வம், கோவை மாநகர சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com