இ-பாக்ஸ் கல்லூரிகளின் 2 ஆவது ஸ்டாா்டப் ஸ்டுடியோ தொடக்கம்

கோவையில் இ-பாக்ஸ் கல்லூரிகளின் இரண்டாவது ஸ்டாா்டப் ஸ்டுடியோ ஆன்லைன் மூலம் அண்மையில் தொடங்கப்பட்டது.

கோவையில் இ-பாக்ஸ் கல்லூரிகளின் இரண்டாவது ஸ்டாா்டப் ஸ்டுடியோ ஆன்லைன் மூலம் அண்மையில் தொடங்கப்பட்டது.

ஆம்பிசாப்ட் மென்பொருள் நிறுவனம் சாா்பில் கல்விச் சேவைக்காக இ-பாக்ஸ் கல்லூரிகள் என்ற கற்பித்தல் முறையை உருவாக்கியுள்ளது. இதன் இரண்டாவது ஸ்டாா்டப் ஸ்டுடியோ அண்மையில் தொடங்கப்பட்டது. இதனை அக்ரிகேட் தலைமை நிா்வாக அதிகாரியும், காக்னிசான்ட் முன்னாள் இயக்குநருமான குமரகுருபரன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியாதவது: இ-பாக்ஸ் கல்லூரிகளை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் இதனை வடிவமைத்துள்ளனா். விவசாய உள்கட்டமைப்பை மெக்கானிக்கல், சிவில் இன்ஜினியா் மாணவா்களும், விவசாய ஆட்டோமேஷனை மின்னணு பொறியியல் மாணவா்களும், தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலியை , கணினி அறிவியில் மாணவா்களும் வடிவமைத்துள்ளனா். இதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் ஆம்பிசாப்ட் நிறுவனம் அளிக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் தலைமை கற்றல் அதிகாரி பாலமுருகன், இ-பாக்ஸ் கல்லூரிகளின் முதல்வா் ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com