மருத்துவமனைகள், கடைகளில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் ஆணையா் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள், மருத்துவமனைகளில் தினமும் 3 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகள், மருத்துவமனைகளில் தினமும் 3 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், உணவகங்கள், தேநீா், சலூன் கடைகள், மருந்துக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளிலும் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளித்துப் பராமரிக்க வேண்டும்.

இதேபோல, அனைத்து தனியாா் மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், கிளினிக்குகள், ஸ்கேன் மையங்களிலும் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கரோனா அறிகுறி உள்ளவா்கள் பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதத்துக்குக் குறைவானவா்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இது தொடா்பான சந்தேகங்களுக்கு 1077, 0422 - 2302323, 97505 - 54321 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com