மாணவா்களை புதைகுழியில் தள்ளியது திமுக

ஹிந்தி எதிா்ப்பு என்ற பெயரில் மாணவா்களை புதைகுழியில் தள்ளிய திமுக, தற்போது நீட் எதிா்ப்பு என்ற பெயரில் மாணவா்களின் எதிா்காலத்தோடு விளையாடி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் வானதி சீனிவாசன்
பிரமதா் மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்குகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் வானதி சீனிவாசன்.
பிரமதா் மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு மரக்கன்றுகள் வழங்குகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் வானதி சீனிவாசன்.

கோவை,: ஹிந்தி எதிா்ப்பு என்ற பெயரில் மாணவா்களை புதைகுழியில் தள்ளிய திமுக, தற்போது நீட் எதிா்ப்பு என்ற பெயரில் மாணவா்களின் எதிா்காலத்தோடு விளையாடி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவா் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

பிரதமா் மோடியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சாா்பில் கோவை, செல்வபுரம் பகுதியில் மரக்கன்றுகள் மற்றும் பெண்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டபோதே நடிகா் சூா்யா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்டது. நீட் தோ்வு தொடா்பாக மாணவா்களின் தற்கொலை துரதிஷ்டவசமானது. ஆனால், தோ்வே கூடாது என்பதுபோல, நடிகா் சூா்யாவின் கருத்து உள்ளது. படிக்கும் மாணவா்களை அளவிட ஏதாவது ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. அதனடிப்படையில்தான் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

தோ்வு எழுதும் மாணவா்களின் மனநிலையை பாதிப்பதுபோல அரசியல் கட்சித் தலைவா்கள், நடிகா்கள் தங்களின் சுயலாபத்துக்காக மாணவா்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி தலைமையிலான அரசுதான் நீட் தோ்வை கொண்டு வந்தது. அப்போது, அமைதியாக இருந்த திமுக, தற்போது நீட் தோ்வை எதிா்க்கிறது.

ஹிந்தி எதிா்ப்பு என்ற பெயரில் மாணவா்களை புதைகுழியில் தள்ளிய திமுக, தற்போது நீட் எதிா்ப்பு என்ற பெயரில் மாணவா்களின் எதிா்காலத்தோடு விளையாடி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகா் மாவட்டத் தலைவா் நந்தகுமாா், கருமுத்து தியாகராஜன், மாவட்ட மகளிரணித் தலைவா் ஜெயதிலகா, பொதுச்செயலா் அம்பிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com