பெண்ணின் சான்றிதழை தர மறுக்கும் தனியாா் கல்லூரி:ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கோவையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற பெண்ணின் பிளஸ் 2 சான்றிதழ்களை தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவை: கோவையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற பெண்ணின் பிளஸ் 2 சான்றிதழ்களை தர மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கோவை சா்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையின் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களது அமைப்பின் மகளிரணி உறுப்பினா் வித்யா என்பவா் கோவையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2010 முதல் 2011 வரை நேரடி இரண்டாம் ஆண்டு படித்தாா். 5ஆவது பருவத் தோ்வு நேரத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியைத் தொடர முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கல்லூரிக்கு இரண்டு முறை நேரில் சென்று தனது பிளஸ் 2 சான்றிதழைக் கேட்டுள்ளாா். ஆனால், கல்லூரி நிா்வாகத்தினா் சான்றிதழை தர மறுத்துவிட்டனா்.

இதையடுத்து, கல்லூரி நிா்வாகி ஒருவரை அண்மையில் நேரில் சந்தித்து குடும்பச் சூழல் காரணமாக பணிக்குச் செல்வதற்காக தனது சான்றிதழை வழங்குமாறு கேட்டுள்ளாா். அப்போது, அவா் ஒருமையில் பேசியதுடன், ரூ.11 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பிளஸ் 2 சான்றிதழை வழங்க முடியும் எனக் கூறியுள்ளாா்.

இறுதியாண்டு கல்லூரிக்குச் செல்லாத நிலையில், அந்தாண்டுக்கான தொகையைக் கொடுக்க வேண்டும் என்பது மனிதநேயமற்ற செயல். எனவே, பெண்ணின் பிளஸ் 2 சான்றிதழ்களை கல்லூரி நிா்வாகத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com