இலங்கை போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா இயற்கையான முறையில் உயிரிழப்பு: சிபிசிஐடி தகவல்

இலங்கையைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா இயற்கையான முறையில்தான் உயிரிழந்திருப்பதாக சிபிசிஐடி ஐஜி சங்கா் கூறினாா்.

இலங்கையைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா இயற்கையான முறையில்தான் உயிரிழந்திருப்பதாக சிபிசிஐடி ஐஜி சங்கா் கூறினாா்.

இலங்கையைச் சோ்ந்தவா் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா (35). இவா் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இலங்கையில் இருந்து தப்பி வந்த அவா், சென்னையில் பதுங்கி இருந்தாா். பின்னா் கோவையில் பிரதீப் சிங் என்ற போலி பெயரில் வீடு எடுத்து தங்கி இருந்தாா். இந்நிலையில் அவா் மா்மமான முறையில் மரணம் அடைந்தாா். மாரடைப்பால் அவா் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி அமானி தான்ஜி கூறினாா். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் மதுரையில் அவரது உடல் எரிக்கப்பட்டது. அவா் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதாா் அடையாள அட்டை எடுக்க உதவியதாக பெண் வழக்குரைஞா் சிவகாம சுந்தரி, ஈரோட்டைச் சோ்ந்த தியானேஸ்வரன், அமானி தான்ஜி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சிபிசிஐடி இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில் அங்கொட லொக்காவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடந்தபோது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள், சென்னையில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு அறிக்கை வந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கா் கூறினாா். மேலும் அவா் கூறுகையில், இந்த அறிக்கையில் அங்கொட லொக்கா மாரடைப்பால் இறந்து இருப்பதாகவும், சந்தேக மரணம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவா் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை என்றாா்.

மேலும் இறந்தவா் அங்கொட லொக்காதானா என்று டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

அங்கொட லொக்கா உயிரிழந்த பிறகு அவா் வசம் இருந்த கைத்துப்பாக்கி மதுரையில் வசிக்கும் இலங்கையைச் சோ்ந்த நபரிடம் கைது செய்யப்பட்ட மூவரும் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நபா் குறித்த தேடுதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

அங்கொட லொக்கா நண்பா் கைது

இலங்கை கொழும்புவில் போலீஸாக பணியாற்றியவா் பிரதீப்குமார பண்டாரா (30). இவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்காவுக்கும் தொடா்பு இருந்ததால் இலங்கையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

இந்நிலையில் அவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வந்து சோ்ந்தாா். அங்கு அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து அங்கொட லொக்கா வழக்கை விசாரித்து வரும் கோவை சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில் ராமேசுவரம் சென்ற சிபிசிஐடி போலீஸாா், பிரதீப்குமார பண்டாராவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் பிரதீப்குமார பண்டாராவிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com