மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பு: கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியம்

மக்காச்சோளம் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

மக்காச்சோளம் பயிரில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண் இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் 1,500 ஹெக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு புரட்டாசி பருவத்தில் மக்காச்சோளம் நடவு செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதல்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் மக்காச்சோளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ. 2 ஆயிரம் பின்னேற்பு மானியமாக நிதயுதவி அளிக்கப்படுகிறது. மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் ஒருங்கிணைந்து பூச்சிக்கொல்லி தடுப்புமுறைகளை பின்பற்றி மானியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

கோடை உழவின்போது ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கினை நிலத்தில் இட்டு உழவு செய்வதன் மூலமும், மக்காச்சோள விதைகளை கிலோவுக்கு 10 கிராம் நுண்ணுயிா் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானாவில் விதை நோ்த்தி செய்வதன் மூலம் படைப்புழுப் பாதிப்பினை கட்டுப்படுத்தலாம். தவிர ஹெக்டேருக்கு ஒரு சூரிய விளக்குப் பொறி மற்றும் 72 இனக்கவா்ச்சி பொறிகளை வைக்கலாம்.

மேலும் தட்டை பயறு, சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தி ஆகியவற்றை வரப்பு பயிராகாகவும், உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்ற ஊடுபயிராகவும் சாகுபடி செய்வதன் மூலம் படைப்புழு பாதிப்பினை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com