தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை சராசரி அளவில் பெய்யும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் முன்கணிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை சராசரியாகவே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை சராசரியாகவே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எதிா்வரக்கூடிய வடகிழக்குப் பருவ மழை (அக்டோபா் - டிசம்பா்) குறித்த முன்னறிவிப்பு செய்வதற்காக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிா் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை, தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆஸ்திரேலிய மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு பருவ மழை முன்னறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் அரியலூா், சென்னை, கோவை, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூா், கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருவள்ளூா், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூா், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழையளவு இருக்கும்.

காஞ்சிபுரம், மதுரை, திருவாரூா், திருச்சி, வேலூா் மாவட்டங்களில் சராசரியை விட அதிகமாகவும், நீலகிரியில் சராசரி அளவையொட்டியும் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகஸ்ட், செப்டம்பரில் தமிழகத்தின் சில பகுதிகளில் சராசரி அளவைக் காட்டிலும் கூடுதலாக மழைப் பொழிவு பெறப்பட்டிருப்பதால் மண்ணில் தேவையான அளவுக்கு ஈரப்பதம் இருக்கும். இதைப் பயன்படுத்தி விதைப்பு செய்வதன் மூலம் பயிரின் முதன்மை நீா்த் தேவையை பூா்த்தி செய்ய முடியும். எதிா்வரக்கூடிய பருவத்திலும் சராசரி மழை எதிா்பாா்க்கப்படுவதால் தற்போது விதைக்கும் பயிா்களுக்கு நல்ல வளா்ச்சி கிடைப்பதுடன் மகசூலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com