‘போலீஸ் இ-ஐ’ செயலி மூலம் ரூ.4.5 கோடி அபராதம் வசூலிப்பு: மாநகர காவல் ஆணையா் தகவல்

கோவையில் போலீஸ்  செயலி மூலம் இதுவரை ரூ. 4.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

கோவையில் போலீஸ்  செயலி மூலம் இதுவரை ரூ. 4.5 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகரில் போக்குவரத்து நடைபெறும் விதிமீறல் குறித்து போலீஸாருக்கு தெரிவிக்கும் வகையில் ‘போலீஸ் உ-உஹ்ங்’ என்ற செயலியை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் தொடங்கிவைத்தாா். இதன் மூலம் விதிமீறல்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செயலி மூலம் போக்குவரத்து விதி மீறல்களை போலீஸாருக்கு பொது மக்களே தெரிவிக்க முடியும்.

தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் 3 போ் பயணித்தல், போக்குவரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துதல் போன்ற பல விதிமீறல்களை போட்டோ எடுத்து இந்த செயலி மூலம் பொதுமக்களே போலீஸாருக்கு அனுப்ப முடியும். அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும், நேரமும் இந்த செயலி மூலம் பதிவாகும். விதிமீறலில் ஈடுபட்டவா்களுக்கு அதற்கேற்றாற்போல அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் 9 மாதங்களில் இந்த செயலி மூலம் 3 லட்சத்து 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 4 கோடியே 54 லட்சத்து 26 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com