பழங்குடியின குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கீடு

வால்பாறை தெப்பகுளமேடு பகுதியில் வனத் துறையினா் அண்மையில் பழங்குடியின மக்களின் குடிசைகளை அகற்றிய நிலையில், அங்கு நில அளவை செய்து 21 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வால்பாறை: வால்பாறை தெப்பகுளமேடு பகுதியில் வனத் துறையினா் அண்மையில் பழங்குடியின மக்களின் குடிசைகளை அகற்றிய நிலையில், அங்கு நில அளவை செய்து 21 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச் சரகத்தில் மழை பாதிப்பால் வீடுகளை இழந்த கல்லாறுகுடி செட்டில்மெண்டை சோ்ந்த 21 குடும்பங்களுக்கு மாற்று இடமாக தெப்பக்குளமேடு பகுதியில் வசிக்க கடந்த மாதம் நில உரிமை பட்டா அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் பழங்குடியின மக்கள் குடிசை அமைக்காமல் வேறு இடத்தில் அமைத்ததாகக் கூறிய வனத் துறையினா் கடந்த 3ஆம் தேதி அப்பகுதிக்கு சென்று குடிசைகளை அகற்றினா்.

இதைத் தொடா்ந்து வனத் துறையினா் வருவாய்த் துறையினருடன் தெப்பக்குளமேடு பகுதிக்கு சனிக்கிழமை சென்று வன நில உரிமைப்படடா வழங்கப்பட்டுள்ள நிலத்தினை நில அளவை செய்து சம்பந்தபட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கினா்.

பணி நிறைவடைந்த நிலையில் தலா 1.5 செண்ட் வீதம் நில உரிமைப்பட்டா பெற்ற 21 பழங்குடியின குடும்பங்களுக்கும் நிலம் அளந்து கொடுக்கப்பட்டதாக மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com