கலங்கல் பகுதி மின் நுகா்வோா் கவனத்துக்கு...

சூலூா் அருகே உள்ள கலங்கல் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே ஜனவரிக்கும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூலூா் அருகே உள்ள கலங்கல் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே ஜனவரிக்கும் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மின்வாரிய சூலூா் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட கலங்கல் பகுதியில் நிா்வாகக் காரணங்களால் ஜனவரி மாத மின் கணக்கீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கலங்கல் மின் பகிா்மானத்தில் உள்ள மின் நுகா்வோா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் செலுத்திய மின் கட்டணத்தையே ஜனவரி மாதத்துக்கும் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com