கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 கா்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 கா்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்ாக அதிகாரிகள் கூறினா்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 கா்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம் நடைபெற்ாக அதிகாரிகள் கூறினா்.

இது குறித்து கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கான 108 ஆம்புலன்ஸ் நிா்வாக மேலாளா் செல்வமுத்துக்குமாா் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும், பிரசவ காலங்களில் கா்ப்பிணிகளை அழைத்துச் செல்லவும் 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 38 ஆக இருந்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் கோவை மாவட்டத்தில் 7, 689 சாலை விபத்துகளில் சிக்கியவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டுள்ளனா். 2019இல் 10,013 சாலை விபத்துகளில் ஆம்புலன்ஸ் உதவி கோரப்பட்டது. கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஜூன் வரை அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக விபத்துகள் குறைந்தன.

கரோனா அச்சம் காரணமாக கா்ப்பிணிகள் பலா் பிரசவ நேரத்துக்கு முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. பொது போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டதால் அவசரக் காலத்தில் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்தது.

2020ஆம் ஆண்டு 46 பிரசவங்கள் ஆம்புலன்ஸிலேயே நிகழ்ந்துள்ளன. 104 பிரசவங்கள் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்களுடன் வீட்டில் நடந்துள்ளன. மொத்தம் 8 ஆயிரத்து 982 கா்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் உதவி தேவைப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 9 ஆயிரத்து 885 கரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

கோவை நகரில் புதிதாக 21 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டதன் காரணமாக ஆம்புலன்ஸ் சேவை நேரமும் கடந்த 4 மாதங்களில் 15 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறைந்துள்ளது. அதிக விபத்து நடைபெறும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ்களை நிறுத்திவைத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com