வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பாக 5 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி தொடா்பாக 5 நாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், உழவா்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டப் படிப்பு பயிலும் மாணவா்கள், பட்டதாரிகள், இளைஞா்கள், தொழில்முனைவோா் பங்கேற்கலாம்.

இதில், வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பயிற்சிக் கட்டணமாக ஒருவருக்கு ஜிஎஸ்டி சோ்த்து ரூ.11,800 வசூலிக்கப்படுகிறது. 20 நபா்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். இது தொடா்பான விவரங்கள், பதிவுக்கு 0422 6611310, 95004 76626 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com