சட்டப் பேரவை தோ்தல்:வாக்குச் சாவடிகளுக்கு ‘கரோனா கிட்’

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் அனுப்பப்படும் பொருள்களில் இந்த முறை ‘கரோனா கிட்’ இணைத்து அனுப்பப்படுவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளன

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் அனுப்பப்படும் பொருள்களில் இந்த முறை ‘கரோனா கிட்’ இணைத்து அனுப்பப்படுவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு, வாக்குச் சாவடி மையம் தயாா்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு தோ்தலுக்கும் வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு காண்பிக்கும் இயந்திரங்களுடன் வாக்காளா்களின் விரலில் வைக்கப்படும் அழியாத மை, எழுதுகோல், வாக்காளா் விவரங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட பொருள்களும் சோ்த்து அனுப்பிவைக்கப்படும். இம்முறை மேற்கண்ட பொருள்களுடன் கரோனா கிட்டும் இணைத்து வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் வாக்களிக்க வரும் வாக்காளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல வாக்காளா்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும், கிருமி நாசினி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தொ்மல் ஸ்கேனா், முகக் கவசம், கையுறைகள், கிருமிநாசினி அடங்கிய கரோனா கிட்டும் தோ்தல் உபகரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கழகம் சாா்பில் வழங்கப்படும் இப்பொருள்கள் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம் மூலம் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் உள்ள 4 ஆயிரத்து 427 வாக்குச் சாவடிகளுக்கும் கரோனா கிட் வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com