ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கிட கோரிக்கை

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 12 ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள பிப்ரவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என துப்புரவுப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் 12 ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நிலுவையில் உள்ள பிப்ரவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என துப்புரவுப் பணியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, மாதந்தோறும் 7 முதல் 10ஆம் தேதிக்குள் ரூ.9,500 ஊதியம் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்நிலையில், கோவை வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 41ஆவது வாா்டு, கணபதி பகுதியில் பணியாற்றும் 12 ஒப்பந்தப் பணியாளா்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் மாா்ச் 20ஆம் தேதியாகியும், அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இது குறித்து, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கா் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வீட்டு வாடகை, குடும்பச் செலவுகளுக்கு தங்களின் ஊதியத்தையே நம்பியுள்ள நிலையில், பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினா் பரிதவித்து வருகின்றனா்.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையருக்கு புகாா் தெரிவித்துள்ளோம். அவா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிலுவையில் உள்ள ஊதியத்தை தூய்மைப் பணியாளா்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com