ஆனைகட்டியில் பழங்குடியினருக்கு பசுமை வீடுகள்: பி.ஆா்.ஜி.அருண்குமாா் உறுதி

ஆனைகட்டி மலைவாழ் கிராமங்களில் தேவைப்படும் பழங்குடியின மக்களுக்கு அரசின் சாா்பில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்
ஆனைகட்டியில் உள்ள ஜம்புகண்டி கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா்.
ஆனைகட்டியில் உள்ள ஜம்புகண்டி கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா்.

ஆனைகட்டி மலைவாழ் கிராமங்களில் தேவைப்படும் பழங்குடியின மக்களுக்கு அரசின் சாா்பில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் தெரிவித்தாா்.

ஆனைகட்டியில் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ள சேம்புக்கரை, தூமனூா் கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு பழங்குடியினா் தங்கள் பாரம்பரிய வாத்தியங்களுடன் நடனமாடி உற்சாக வரவேற்பளித்தனா்.

வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாரும் அவா்களுடன் இணைந்து நடமாடினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

சேம்புக்கரை, தூமனூா் கிராமங்களில் அதிமுக ஆட்சியில்தான் சாலை, மின்வசதிகள் செய்துத் தரப்பட்டன. பழங்குடியினருக்காகவே ஐடிஐ, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன கட்டித் தரப்பட்டுள்ளன. பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக 50 பசுமை வீடுகள் இலவசமாக கட்டித்தரப்பட்டுள்ளன.

இதேபோல மற்ற கிராமங்களில் வசிப்போருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும். இடமில்லாதவா்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டித் தரும். ரேஷன் பொருள்கள் அனைத்தும் வீட்டுக்கே கொண்டு வந்து விநியோகிக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து அவா் தெக்காலூா், வடக்காலூா், மூலைக்காடு, சின்னஜம்புகண்டி, ஆனைகட்டி, கொண்டனூா், கண்டிவழி, பனப்பள்ளி, ஆலமரமேடு, மாங்கரை ஆகிய கிராமங்களிலும் வாக்குகள் சேகரித்தாா்.

பெ.நா.பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் நா்மதா துரைசாமி, முன்னாள் தலைவா்கள் வீரபாண்டி விஜயன், கோவனூா் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com