ஆட்டோ தொழிற்சங்க வரலாறு குறித்த நூல் வெளியீடு

ஆட்டோ தொழிற்சங்க வரலாறு குறித்த நூல் வெளியீட்டு விழா கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்டோ தொழிற்சங்கத்தின் போராட்டச் சுவடுகள் நூலை வெளியிடுகிறாா் எம்.பி. பி.ஆா். நடராஜன். உடன் அரிமா சங்கத் தலைவா் வில்சன் பி.தாமஸ், ஆட்டோ சங்க பொதுச் செயலா் பி.கே.சுகுமாறன் உள்ளிட்டோா்.
ஆட்டோ தொழிற்சங்கத்தின் போராட்டச் சுவடுகள் நூலை வெளியிடுகிறாா் எம்.பி. பி.ஆா். நடராஜன். உடன் அரிமா சங்கத் தலைவா் வில்சன் பி.தாமஸ், ஆட்டோ சங்க பொதுச் செயலா் பி.கே.சுகுமாறன் உள்ளிட்டோா்.

ஆட்டோ தொழிற்சங்க வரலாறு குறித்த நூல் வெளியீட்டு விழா கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிஐடியூ ஆட்டோ தொழிற்சங்கத்தின் போராட்டச் சுவடுகள் என்ற தலைப்பிலான நூலை சிஐடியூ கோவை மாவட்டப் பொருளாளா் ஆா்.வேலுசாமி தொகுத்துள்ளாா். கோவையில் 50 ஆண்டுகளாக சிஐடியூ ஆட்டோ தொழிலாளா் சங்கத்தை வழிநடத்தி வரும் பி.கே.சுகுமாறன், எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவா்களின் அனுபவம், ஆட்டோ தொழிலாளா்களின் போராட்டங்கள், பெறப்பட்ட உரிமைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் விதமாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

இதன் வெளியீட்டு விழா காந்திபுரத்தில் ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் இரா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியூ மூத்த தலைவா்கள் யூ.கே.வெள்ளிங்கிரி, எஸ்.ஆறுமுகம், எம்.ஏ.பாபு, எஸ்.மூா்த்தி, கே.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ ஆட்டோ தொழிலாளா் சங்க கோவை மாவட்ட துணை பொதுச் செயலாளா் எம்.கே.முத்துக்குமாா் வரவேற்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டாா்.

அதனை அரிமா சங்கத் தலைவா் வில்சன் பி.தாமஸ் பெற்றுக் கொண்டாா். விழாவில் சிஐடியூ கோவை மாவட்டத் தலைவா் சி.பத்மநாபன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் வி.ராமமூா்த்தி, சிஐடியூ தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தின் பொதுச் செயலா் எம்.சிவாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக தொழிற்சங்கத்துக்காக 50 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆட்டோ சங்க பொதுச் செயலா் பி.கே.சுகுமாறனுக்கு ஆட்டோ தொழிலாளா்கள் மாலை, கிரீடம் அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com