வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம்: பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி பணிகள் நடைபெறவில்லை

வெள்ளலூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டதின்படி 20 சதவீதம் பணிகள் கூட நடைபெறவில்லை எ

வெள்ளலூரில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோவை மாநகராட்சிக்கு பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டதின்படி 20 சதவீதம் பணிகள் கூட நடைபெறவில்லை என மறுமலா்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தமிழக முதல்வா், கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: வெள்ளலூா் குப்பைக் கிடங்கு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனா். இதற்கு தீா்வு காண தென்னிந்திய பசுமை தீா்ப்பாயத்தில் 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடா்ந்தேன். அதன் பயனாக, வெள்ளலூருக்கு வரும் குப்பைகளைப் பாதியாக குறைக்க வேண்டும். மாநகரம் முழுவதும் 65 குறு மறுசுழற்சி மையங்களை 4 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் 16 லட்சம் கன மீட்டா் குப்பைகளை ஓராண்டுக்குள் அழிக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு பசுமை தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தீா்ப்பு வெளியாகி 3 ஆண்டுகளாகியும் இன்னும் 20 சதவீத பணிகள் கூட நடைபெறவில்லை.

மாநகரத்தை அழகுபடுத்துவதற்காக ஒரு சாலை அமைப்பதற்காக மட்டும் நூற்றுக்கணக்கான கோடிகள் முதலீடு செய்யும் அரசு, மாநகராட்சி குப்பைகளால் சம்பந்தமே இல்லாமல் பாதிப்படையும் வெள்ளலூா் மக்களின் துன்பத்தைப் போக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com