தீபாவளியை முன்னிட்டு கோவையில் 1000 போலீஸாா் பாதுகாப்பு

தீபாவளியை முன்னிட்டு கோவையில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கோவை ஒப்பணக்கார வீதியில் பொருள்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
கோவை ஒப்பணக்கார வீதியில் பொருள்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

தீபாவளியை முன்னிட்டு கோவையில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் வெகு சில நாள்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருள்கள், பட்டாசுகள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பூ மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பா் 1ஆம் தேதி முதல் அனைத்து வகைக் கடைகளும் முழு நேரம் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் வழிப்பறி, திருட்டு நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே மாநகா், மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடை வீதி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள் முன்பு போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com