கோவை மாவட்டத்தில் 1.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 1.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 1.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கோவை மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறையினா் சாா்பில் மக்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த நாள்களில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் 5 லட்சத்து 51ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அசைவம் உண்பதால், தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வந்தனா். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, கோவையில் 1,370 முகாம்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் கூறுகையில், கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 799 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இவா்களில் கோவிஷீல்டு 1,05,099 பேருக்கும், கோவேக்ஷின் 12,700 பேருக்கும் செலுத்தப்பட்டது என்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com