200 பேருக்கு நுண்துளை ரத்த நாள அறுவை சிகிச்சை:கோவை அரசு மருத்துவமனை சாதனை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா்களுடன் ரத்தநாள அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கடந்த 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

நோயாளிகளுக்கு கை, கால், குடல், மூளை உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் ரத்த நாள அடைப்புகளால் அப்பகுதி அழுகி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு தாங்க முடியாத வலி ஏற்படும். அத்தகைய சமயங்களில் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

அடைப்பினை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் கண்டறிந்து உடனடியாக அடைப்பை அகற்றி ஆபத்தை தவிா்க்கலாம்.

நுண்துளை அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 200 பேருக்கு ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவா்களுக்கு ரத்தநாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com