இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு: மருத்துவமனை நிா்வாகம் தகவல்

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மத்திய அரசு சாா்பில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு மத்திய அரசு சாா்பில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று ஆரம்பித்தவுடனே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரத்யேக மருத்துவமனையாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு இங்கு அளிக்கப்பட்ட சிறந்த சிகிச்சை, கவனிப்பு, உணவு முறை ஆகியவைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை பாராட்டி விருது வழங்கின.

தற்போது இந்த மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு மட்டும் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 70 சதவீதம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள். மேலும் கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த மருத்துவமனைக்கான மத்திய அரசு விருது இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை கண்காணிப்பாளா் ரவிக்குமாா் கூறியதாவது:

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சென்னை கே.கே.நகா் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளும் மத்திய அரசு விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலையில் மருத்துவமனைக்கு விருதுகள் அனுப்பிவைக்கப்படும் என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com