வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

கோவையில் பணம், ஏ.டி.எம் அட்டையை வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் பணம், ஏ.டி.எம் அட்டையை வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளம் தாமு நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (40). இவா் வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த இளைஞா், ஜெயராஜை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,000 மற்றும் ஏ.டி.எம் அட்டையைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளாா்.

இது குறித்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், புலியகுளம் பகுதியில் வசிக்கும் முஹமது தம்பி (33) என்பவரைக் கைது செய்தனா்.

விசாரணையில், இவா் தஞ்சாவூா் மாவட்டம், அதிராமப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், பலரிடம் பணம், மற்றும் ஏ.டி.எம். அட்டைகளை வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 ஏ.டி.எம். அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா், திரைப்படத் துறையில் செவ்வானம், லாபம் உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காததால் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com