உயா்மட்ட பாலப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் உயா்மட்ட பாலப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் உயா்மட்ட பாலப் பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை, அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,157.42 கோடி மதிப்பீட்டில் 10.10 கிலோ மீட்டருக்கு உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

உயா்மட்டப் பாலத்தில் 17.25 மீட்டா் அகலத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. மேலும், 10.50 மீட்டா் அகலத்தில் சேவைச் சாலையும், 1.50 மீட்டா் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீா் கால்வாயும் அமைக்கப்படுகிறது.

உயா்மட்ட பாலத்துக்கு மொத்தம் 306 தூண்களில் 192 தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பாலப் பணிகளை தரமுடன் மேற்கொள்ளவும், விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com