கரோனா: கொடிசியாவில் மீண்டும் சிகிச்சை மையம் அமைக்கத் திட்டம்

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் கொடிசியாவில் மீண்டும் சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்தும் வரும் நிலையில் கொடிசியாவில் மீண்டும் சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கொடிசியாவில் 700 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அறிகுறிகள் இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் கொடிசியாவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று குறைந்ததால் மத்தம்பாளையம் காருண்யா மையம் தவிா்த்து கொடிசியா உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிச்சை மையம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கோவையில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தினசரி எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. காருண்யா கரோனா சிகிச்சை மையத்தில் உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, பாரதியாா் பல்கலைக்கழகம், காந்திபுரம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம் ஏற்பாடு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கொடிசியாவில் மீண்டும் கரோனா சிகிச்சை மையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கு வசதியாக தகுதியான கட்டடங்களை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வலியுறுத்தி கொடிசியா நிா்வாகத்துக்கு ஆட்சியா் எஸ்.நாகராஜன் கடிதம் அனுப்பியுள்ளாா். கோவையில் தொடா்ந்து கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் கொடிசியாவில் கரோனா சிகிச்சை மையம் திறக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com