காவல் துறையினருக்கு தபால் வாக்கு: கோவையில் நாளை சிறப்பு முகாம்

கோவையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினா் தங்களது தபால் வாக்கினை செலுத்துவதற்கான

கோவையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினா் தங்களது தபால் வாக்கினை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்கு 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலா்கள், பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். ஏற்கெனவே வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலா்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. தவிர, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பின்போது, தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் 10 தொகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள காவலா்கள் தங்களது தபால் வாக்குகளை செலுத்துவதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) நடைபெறவுள்ளது.

மாநகர காவல் துறையினருக்கு காவல் ஆணையா் அலுவலகம் அருகே உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்திலும், சூலூா், கோவை வடக்கு, தொண்டாமுத்தூா், கோவை தெற்கு, சிங்காநல்லூா், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் பணியாற்ற உள்ள ஊரக காவல் துறையினருக்கு பி.ஆா்.எஸ். காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்திலும், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளில் பணியாற்றும் ஊரக காவல் துறையினருக்கு மேட்டுப்பாளையம் ஐஸ்வா்யா திருமண மண்டபத்திலும், வால்பாறை, பொள்ளாசி ஆகிய தொகுதிகளில் பணியாற்றும் ஊரக காவல் துறையினா் பொள்ளாச்சி நகரத்தாா் மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாநகர காவல் துறையினா், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊரக காவல் துறையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

சிறப்பு முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தபால் வாக்குப் படிவத்தில் சான்று அளிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com