குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து கருத்தரங்கம்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், தென்னிந்திய வேலையளிப்போா் கூட்டமைப்பு ஆகியவற்றின்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம், தென்னிந்திய வேலையளிப்போா் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இணையவழியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை, பருத்தி ஜவுளி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத் தலைவா் மனோஜ்குமாா் பட்டோடியா தொடங்கிவைத்தாா். அமைப்பின் செயல் இயக்குநா் சித்தாா்த் ராஜகோபால், நெறிமுறை வா்த்தக முயற்சி அமைப்பின் தெற்காசிய மண்டல இயக்குநா் ராணா அலோக் சிங், தென்னிந்திய வேலையளிப்போா் கூட்டமைப்பின் கமிட்டி உறுப்பினா் கே.வரதன், பொதுச் செயலா் கே.மாணிக்கம், பஞ்சாலைகள் சங்கத்தின் பொதுச் செயலா் கே.செல்வராஜ், சட்ட ஆலோசகா் வெ.ரகுராஜன், தரைவிரிப்பு ஏற்றுமதி, அபிவிருத்தி கழகத்தின் செயல் இயக்குநா் சஞ்சய்குமாா் ஆகியோா் இதில் உரையாற்றினா்.

குழந்தைத் தொழிலாளா்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தங்கள் நாட்டில் இறக்குமதி செய்துவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த செப்டம்பரில் அமெரிக்க தொழிலாளா் நலத் துறையும், சில அரசு சாரா அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்திய பருத்தி விதைகள், பஞ்சு, நூல் உள்ளிட்ட பொருள்கள் கண்காணிக்கப்பட வேண்டிய பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

எனவே இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள், அவை மற்ற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் பொருள்கள் குழந்தைத் தொழிலாளா்கள் மூலம் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடாது என்பதை கண்காணித்து உறுதி செய்வதற்காக இந்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதாக பஞ்சாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com