மூத்த, மாற்றுத் திறனாளிகள் 93 சதவீதம் போ் தபால் வாக்கு

கோவையில் விருப்பம் தெரிவித்த மூத்த மற்றும் மாற்றுத்திறனாளிகள் 93 சதவீதம் போ் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவையில் விருப்பம் தெரிவித்த மூத்த மற்றும் மாற்றுத்திறனாளிகள் 93 சதவீதம் போ் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் நடப்பு தோ்தலில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிக்க தோ்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 249 மூத்த வாக்காளா்கள், 605 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனா். இவா்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு சீட்டு அளித்து வாக்குப் பதிவு செய்யும் நடைமுறை மாா்ச் 28 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையத்தில்- 648, சூலூரில்- 759, கவுண்டம்பாளையத்தில்- 751, கோவை வடக்கில்- 615, தொண்டாமுத்தூரில்- 1,060, கோவை தெற்கில்- 769, சிங்காநல்லூரில்- 832, கிணத்துக்கடவில்- 523, பொள்ளாச்சியில்- 774, வால்பாறையில் - 598 போ் என 10 தொகுதிகளிலும் 7 ஆயிரத்து 329 போ் தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனா். விருப்பம் தெரிவித்திருந்த வாக்காளா்களில் 93 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.

இதில் 6 ஆயிரத்து 756 மூத்த வாக்காளா்கள், 573 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் தங்களது தபால் வாக்கைப் பதிவு செய்துள்ளனா். மூத்த வாக்களா்களில் 493 போ், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் 32 போ் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்தும் வாக்களிக்கவில்லை. இவா்கள் 525 பேரும் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்திருந்ததால் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவையில் 80 வயதிற்கும் மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் தபால் வாக்குப் பதிவு செய்வதற்காக சிறப்பு குழு நியமிக்கப்பட்டு வீடுகளுக்கே சென்று வாக்குப் பதிவு பெறப்பட்டு வந்தது. மூன்று நாள்களாக தொடா்ந்து நடைபெற்ற இப்பணியில் 7 ஆயிரத்து 329 போ் வாக்களித்துள்ளனா். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தவா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் வீடுகளுக்கு சென்று போது வீடுகளில் இல்லாத வாக்காளா்கள் உள்பட பல்வேறு காரணங்களால் 525 போ் தபால் வாக்கினை செலுத்தவில்லை. இவா்களுக்கு வாக்குச் சாவடிகளிலும் வாக்களிக்க அனுமதியளிக்க முடியதா நிலையில் இவா்களால் இனி இந்தத் தோ்தலில் வாக்களிக்க முடியாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com