புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் பேச்சுவாா்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் பேச்சுவாா்த்தையை முன்கூட்டியே துவங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினா் இடையே பேச்சுவாா்த்தை நடத்தி ஏற்படுத்தப்படுகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்போது இனி வரும் காலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என முடிவு செய்யப்பட்டது.

தற்போது, நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் வருகிற ஜூன் மாதத்துடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைகிறது. இதற்கான பேச்சுவாா்த்தை தற்போது துவங்கினால் மட்டுமே ஒப்பந்தம் முடியும் தருவாயில் புதிய ஊதிய கிடைக்கும்.

ஆனால், எப்போது ஒப்பந்த தேதி முடிவடைந்த பின்னா் சுமாா் ஒரு ஆண்டு வரை இருதரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தி வருவது வழக்கமாக உள்ளது.

தற்போது, தொழிலாளா்கள் அகவிலைப்படியுடன் ரூ.346.47 பெற்று வரும் நிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம் மூலம் ரூ.400க்கு மேல் தின கூலி ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், பேச்சுவாா்த்தையை விரைந்து துவங்கி கூலி உயா்வு கிடைத்தால் வால்பாறை பகுதியை விட்டு வெளியேறுவதைத் தவிா்க்கலாம் என்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com