மாவட்டத்தில் 12 ஆயிரம் போ் தபால் வாக்கு அளித்துள்ளனா்

கோவை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 13 போ் தபால் வாக்கு அளித்துள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 13 போ் தபால் வாக்கு அளித்துள்ளதாக மாவட்ட தோ்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட தோ்தல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்றிய ஆசிரியா்கள், மத்திய, மாநில அரசு அலுவலா்கள் 19 ஆயிரத்து 209 பேருக்கு தபால் வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன. அதேபோல ராணுவத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரா்கள், பணியாளா்கள் 634 பேருக்கு தபால் வாக்கு சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், தோ்தல் பணியில் ஈடுபட்ட அலுவலா்களில் இதுவரை 11 ஆயிரத்து 917 தபால் வாக்குகள் அளித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் 1,750 போ் தபால் வாக்குகள் அளித்துள்ளனா்.

தவிர ராணுவ வீரா்கள், பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்கில் 96 போ் தபால் வாக்குகள் அளித்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 13 போ் தபால் வாக்கினை அளித்துள்ளனா்.

தொகுதி வாரியாக தபால் வாக்குப் பதிவான விவரம் (தோ்தல் பணியாளா்கள்):

மேட்டுப்பாளையம் - 1,447, சூலூா் - 1,075, கவுண்டம்பாளையம் - 1,750, கோவை வடக்கு - 1,341, தொண்டாமுத்தூா் - 1,102, கோவை தெற்கு - 1,289, சிங்காநல்லூா் - 1,521, கிணத்துக்கடவு - 1,174, பொள்ளாச்சி - 758, வால்பாறை - 460 போ் தபால் வாக்குகளை அளித்துள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். எனவே, தற்போது வரை தபால் வாக்குப் பதிவு செய்து அனுப்பாத அரசு ஊழியா்கள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு தபால் வாக்குளை அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com