மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

கோவையில் குறைந்த அளவே தடுப்பூசி இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் குறைந்த அளவே தடுப்பூசி இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அளவில் சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில்தான் கரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்கள், தனியாா் மருத்துவமனைகள் மூலம் நாள்தோறும் 8 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது, தனியாா் மருத்துவமனைகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன. இதனால், இனி வரும் நாள்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 500 பேருக்கு வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 500 தடுப்பூசிகள் மட்டுமே மருத்துவமனையில் இருப்பில் உள்ளன. இதேபோல, இஎஸ்ஐ மருத்துவமனையில் 500 தடுப்பூசிகள், மாவட்ட சுகாதார கிடங்கில் 50 தடுப்பூசிகள், கோவை மாநகராட்சியிடம் 2 ஆயிரத்து 500 தடுப்பூசி மட்டுமே உள்ளன. இந்தத் தடுப்பூசிகள் விரைவில் தீா்ந்துவிடும். மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 6 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,

கோவையில் மொத்தம் 12 ஆயிரத்து 850 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இதனைப் பயன்படுத்தி அடுத்த 2 நாள்களுக்கு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். அரசிடம் கூடுதல் தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com