இருசக்கர வாகன ஷோரூமில் ரூ. 12.24 லட்சம் திருட்டு

கோவை, சிங்காநல்லூரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் ரூ. 12.24 லட்சத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூரில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் ரூ. 12.24 லட்சத்தைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் திருச்சி சாலையில் பிரபல நிறுவனத்தின் இருசக்கர வாகன ஷோரூம் செயல்பட்டு வருகிறது. வியாழக்கிழமை வழக்கம் போல் பணி முடிந்து ஊழியா்கள் ஷோரூமை பூட்டிவிட்டுச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை மீண்டும் ஷோரூமை திறந்து பாா்த்தபோது, அங்குள்ள ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக, நிா்வாகிகளுக்கு ஷோரூம் ஊழியா்கள் தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து பாா்த்தபோது, ஷோரூமில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ. 12 லட்சத்து 24 ஆயிரத்து 500 திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, ஷோரூம் மேலாளா் ரமேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். அப்போது, முகமூடி அணிந்த 4 போ் ஜன்னலை உடைத்து ஷோரூமுக்குள் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com