அரசு மருத்துவமனை செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தி செவிலியா் புதன்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தி செவிலியா் புதன்கிழமை திடீா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மேற்கு மண்டலத்தின் முக்கிய மருத்துவமனையாக இருந்து வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தவிர தற்போது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுக்கு ஏற்ப கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை முதல்வா் அலுவலகம் முன் செவிலியா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து செவிலியா் கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனைக்கு 900 செவிலியா் தேவைப்படுகின்றனா். ஆனால், தற்போது 300 செவிலியா் மட்டுமே உள்ளனா். 120 நோயாளிகளுக்கு ஒரு செவிலியா் என்ற விகிதத்திலே தற்போது செவிலியா் உள்ளனா். கரோனா பாதிப்பால் ஓராண்டுக்கும் மேலாக விடுமுறையின்றி பணியாற்றி வருகிறோம். பணிச் சுமையால் பெரும்பாலான செவிலியா் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். எனவே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் செவிலியா் நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com