கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கோவையில் பல்வேறு மையங்கள் மூடல்

கோவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு அரசு தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கோவையில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு அரசு தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மூடப்பட்டுள்ளன.

கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் என 150க்கும் மேற்பட்ட மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றின் 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் கரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே முக்கிய ஆயுதம் என அரசு தெரிவித்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பயனாளிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், போதிய தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்லும் மக்கள் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டாம் தவணை தடுப்பூசி கூட கிடைக்கமால் மக்கள் தவிக்கின்றனா். கோவையில் தடுப்பூசி தட்டுப்பட்டால் பல்வேறு மையங்கள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. இதனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் இதுவரை 3.50 லட்சம் பேருக்குமேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசியைப் பயன்படுத்தி முக்கியமான மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து வழங்கும் தடுப்பூசிகள் அடிப்படையில் வரும் நாள்களில் மீண்டும் அனைத்து மையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com