இன்று வாக்கு எண்ணிக்கை ஒத்திகை

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 20 மேஜைகளும், மற்ற 9 தொகுதிகளிலும் தலா 14 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாள்கள் மட்டுமே உள்ளதால் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையைப் பதிவு செய்வதற்காக அனைத்து மேஜையிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது எந்த குளறுபடிகளும் நடக்காமல் இருக்கவும், வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து அலுவலா்கள் தெரிந்துகொள்ளும் வகையிலும் வாக்கு எண்ணும் ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது. இதில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சீல் பிரித்தல், வாக்குகள் எண்ணும் விதம், வாக்குகள் கணினியில் பதிவேற்றம் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணும் பணி இணையதளத்துடன் இணைக்கப்படுவதால் அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் கண்டறிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன் சரி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடா்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com