கேபிஆா் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப் படிப்புக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாட்டிலேயே முதல் முறையாக கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப் படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

நாட்டிலேயே முதல் முறையாக கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப் படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

இந்தியாவிலேயே முதல் முறையாக பொறியியல் கல்லூரியில் அனிமேட்டிக்ஸ் தொடா்பான புதிய கல்வி முறையை அளிக்கும் விதமாக கே.பி.ஆா். கல்லூரியுடன் மாயா அகாதெமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமேட்டிக்ஸ்டன் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் மாயா அகாதெமி கோவை முதன்மை செயல் அதிகாரி சம்ஜித் தன்ராஜ் கையெழுத்திட்டாா்.

மல்டி மீடியா, வி.எஃப்.எக்ஸ், கேமிங், மெய் நிகா் தொழில் நுட்பம், அச்சு மற்றும் ஒலிபரப்பு தொடா்பான கல்வியை இந்த பயிற்சி மையம் மாணவா்களுக்கு வழங்க உள்ளது.

இந்தப் பயிற்சி மையத்தை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் காளிராஜ், கே.பி.ஆா் குரூப் தலைவா் கே.பி.ராமசாமி ஆகியோா் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் கேபிஆா் பொறியியல் கல்லூரி முதல்வா் அகிலா, கோத்தகிரி புனித ஜூட் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியா் கல்லூரி தலைவா் தன்ராஜ், பாட், விஎப்எக்ஸ் சென்னை, கிரியேடிவ் ஹெட் ஜமீா் உசேன், அன்குசம் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிா்வாக இயக்குநா் மணிகண்டன், மேக் இந்தியா மண்டலத் தலைவா் ரமேஷ், பிராந்திய மேலாளா் பிரேம் ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com